Tuesday, June 12, 2018

ஒரு ஓலா ஆட்டோ அனுபவம்.

அந்த மின்சார ரயில் சேத்துபட்டு ரயில் நிலையம் உள்ளே நுழைந்தது. நானும் எனது மனையாளும் இறங்கினோம். மழலைக்கு சில புத்தகங்கள் வாங்க சின்மையா செல்ல வேண்டும்.

ஓலா கேப் மூலம் ஆட்டோ புக் செய்து விடுகிறேன் என்றவாறு எனது செல்பேசியை இயக்கினேன். பத்து நிமிடம் கழித்து தான் வரும் என்று தகவல். தோராயமாக 35 ரூபாய் கட்டணம் என்றும் காட்டியது.

மிக அருகில் தான். வெய்யில் மட்டும் இல்லை என்றால் நடந்தே சென்று விடலாம். எதற்கும் இருக்கட்டும் என்று அருகில் இருந்த ஆட்டோவை விசாரித்தோம்.

"70 ரூபாய் தாங்க" என்று கூச்சமே இல்லாமல் கேட்டார். நல்ல வேளை, ஓலா இருந்தது. இல்லையேல் இவர்களின் கொள்ளையில் சிக்கி இருப்போம் என்று கடவுளுக்கு நன்றி கூறினேன்.

பதினைந்து நிமிடம் கழிந்தது. நடந்து சென்றால் இந்நேரம் சின்மையா அருகில் சென்றிருப்போம். வெய்யிலை பார்க்காமல் நடந்து விடலாமா என்று ஒரு எண்ணம் உதிக்கையில் ஓலா ஆட்டோ வந்தது.

ஏறி அமர்ந்த பத்தாம் நிமிடம் சின்மையாவை அடைந்தோம். ஆட்டோ விட்டு இறங்கி எனது செல்பேசியில் ஒலா ஆப்பை தட்டி விட்டேன். 35 ரூபாய் ஓலா கேஷ் மூலம் கொடுத்து விட்டேன் என்று தகவல் காட்டியது.

"ஓலா கேஷிலா பணம் கட்டினே? அவங்க குடுக்க மாட்டாங்க பா. 35 ரூபாய் பணமா குடுத்துடு" என்றார் ஆட்டோ டிரைவர்.

"க்நிஃபெ"

மனைவியிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. எடுத்து பேசினேன். "உங்களுக்கு "க்நிஃபெ" னா என்னனு தெரியுமா?" எடுத்தவுடன் கே...