Saturday, May 19, 2018

காக்கா வடை வாங்கிய‌ கதை

"அப்பா, அந்த காக்கா வடை சுட்ட கதைய திரும்ப‌ சொல்லு", எனது மழலை கேட்டாள்.

"ஏதுக்கு டா?" என்று கேட்டேன். "இன்னும் ஒன் டைம் மட்டும் சொல்லுப்பா ", என்று கொஞ்ச‌லாய் கெஞ்சினாள்.

சரி என்று மறுபடியும் பாட்டி வடை சுட்டதில் ஆரம்பித்து கதை சொல்லி முடித்தேன். ஒரு கனம் யோசித்து பின் கவலை முகத்தோடு இருப்பதை கண்டு "என்ன ஆச்சு?" என்று கேட்டேன்.

"அந்த காக்கா பாவம். அதுக்கு பசிக்குமே!" என்றாள்.

"என்ன பன்றது? நரி பேச்ச கேட்டு ஏமாந்து போச்சு".

"நரிகிட்டேந்து அந்த வடைய காக்கா கிட்டயே வாங்கி குடுத்துடலாம்", என்று ஐடியா சொன்னாள்.

"அப்படி பன்னினா நரிக்கு பசிக்குமே?" என்றேன். கொஞ்சம் யோசித்துவிட்டு பின், "நரி இன்னோரு வடைய பாட்டிகிட்டேந்து எடுத்துக்கட்டுமே", என்று  இன்னொரு ஐடியா குடுத்தாள்.

எவ்வளவு தூரம் போறதுன்னு பாப்போம்னு யோசிச்சு அவளிடம் கேட்டேன், "பாட்டி பாவம். ஏற்கனவே காக்கா ஒரு வடைய எடுத்துண்டு போய்டுத்து. இப்போ நரியும் ஒரு வடைய‌ எடுத்துண்டு போச்சுனா பாட்டி கடைல வடையே நிறைய‌ இருக்காது. வடைய வித்தா தானே பாட்டிக்கு காசு கிடைக்கும்? அப்போ தானே ஏதாவது வாங்க முடியும்?"

"பாட்டிக்கு நம்ம காசு குடுத்துடலாம்", என்று சட்டென்று சொல்லி சிரித்தாள்.

No comments:

Post a Comment

"க்நிஃபெ"

மனைவியிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. எடுத்து பேசினேன். "உங்களுக்கு "க்நிஃபெ" னா என்னனு தெரியுமா?" எடுத்தவுடன் கே...